Sunday, August 21, 2011

யாரிடமும் சொல்லாதே என் மனமே.

எழுத நினைக்கின்ற எதையும் எழுதிவிட
நான் ஒன்றும் அயல்நாட்டில் இல்லை
அகிம்சையை மதிக்க இவன் ஒன்றும்
ஆங்கிலேயன் அல்ல.

பெண்கள் மார்பில் கீறி மகிழும் அரக்கர் கூட்டம்
தட்டிக்கேட்க எவறும் இல்லை
என்ற மமதையில் ஆடுகிறது ஆட்டம்.
காவலனே கள்வனுக்கு காவலானபோது

யாரிடம் முறையிடுவது.
யார் கூச்சல்இட்டும் நடப்பது ஏதுமில்லை
வதந்தி வதந்தி என்று உண்மையை மறைத்து
உலகை ஏய்க்கிறது.
கள்வனை மறைத்துவிட்டு பிடிக்கப்போனவனை
உதைத்து குற்றவாளியாக்கிகூண்டில் வைக்கிது.
அதைவிடக்கொடுமை காயம்பட்ட பெண்னை
மனநலம் குறைந்தவர் என்றும்
தன்னைத்தானா கீறினார் என்றும் பதிவுசெய்வது.

தமிழ்பேசும் மக்கள் எல்லாம்
மனநலம் குறைந்தவர்கள் என்கிறதோ....
83 இற்கு பிறகு மீண்டும் ஒருமுறை
இளஞர்களை மட்டுமல்ல் எட்டப்பர்களையும்
ஏமாந்தவர்களையும் சிந்திக்க வைக்கிறது.

தமிழனுக்கு என்று ஒன்று இல்லாதவரை
எட்டுக் கோடி என்ன எண்பது கோடி இருந்தும்
ஆகப்போவது ஏதுமில்லை.